ஆளும் வர்க்கத்தின் துணையுடனும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும், இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, கடத்தப்பட்டு பாலைவனமாகும் கன்னியாகுமரி – மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்
23/11/2024
தியாகத்தாலும் இரத்தத்தாலும் உருவான கன்னியாகுமரி மாவட்டம், இன்று ஆளும் வர்க்கத்தின் துணையுடனும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும், இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, கடத்தப்பட்டு பாலைவனமாகும் அபாயம் உருவாகி வருகிறது. இந்த போக்கைத் தடுத்து நிறுத்திட, மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கிட, கன்னியாகுமரி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் திரு இரா கதிரேசன் அவர்கள் தலைமை தாங்க, கன்னியாகுமரி மாவட்ட மேற்கு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் ஆகாஷ் தேவ் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் திரு பா குமரய்யா கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
1.கனிம வளங்கள் கொள்ளையடிப்பது தடுக்கப்பட வேண்டும், குமரி மாவட்டம் உட்பட்ட தென் மாவட்ட மக்கள் அனைத்திற்கும் சென்னைக்கு அலையாமல் இருக்க மதுரையை இரண்டாம் தலைநகரமாக ஆக்க வேண்டும்,
2.தென் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்திட மதுரையில் தென் மண்டல வளர்ச்சி வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும், அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்,
3.குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், நெய்யாறு இடது கரை கால்வாயில் நீர்வரத்து, ஏவிஎம் கால்வாயை சீரமைத்து நீர் வழிப்பதையாகப் பயன்படுத்துதல், கடலில் மாயமாகும் மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்,
4.குமரி மாவட்ட ரயில் நிலையங்களை திருவனந்தபுரம் கூட்டத்திலிருந்து விடுவித்து மதுரை கோட்டத்தில் சேர்க்க வேண்டும்,
5.மந்தகதியில் நடக்கும் இரயில்வே திட்டங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும், திட்டங்கள் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காமராஜர் மக்கள் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர் சீ கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் காளிராஜா மாநிலச் செயலாளர்கள் சு தியாகராஜன், இரா ரெங்கராஜன், மாநில மகளிரணித் தலைவர் வள்ளி ரமேஷ், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் க சுரேஷ்குமார், மாநிலப் பொறியாளர் அணித் தலைவர் ப வரதராஜன், மாநில வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் பெத்துராஜ், அருளானந்து, மாநில இளைஞரணிச் செயலாளர் அ அரவிந்தன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் குரு அய்யல்ராஜ், ஈஸ்வரன், உதயகுமார், அருணாச்சலம், வெள்ளிங்கிரி, இராஜேந்திரன், கருப்புசாமி, ஷாகுல், குமரி மாவட்ட ஜனதா தளத் தலைவர் அருள்ராஜ், ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் தெய்வராஜன், இராஜசேகரன், மேனாள் காந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் செல்லத்துரை, மேனாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மணி, பார்வதி ஆகியாரும், காமராஜர் மக்கள் கட்சியின் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.