மழைநீர் சேகரிப்பு நகர்ப்புறங்களில் வீணாகும் தண்ணீர்
26/11/2024
தமிழ்நாட்டில், கடந்த 2001ஆம் ஆண்டு முதல், கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, இச்சட்டம் கொண்டுவரப்பட்டுத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டடங்களும் கட்டயாமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 50 விழுக்காடு வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்புத் திட்டம் நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மற்றும் மழை வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தாமல் சாலைகளில் வெளியேற்றப்பட்டு மிகுந்த சிரமங்களுக்கு வாகன ஓட்டிகளை உட்படுத்துகிறது.
இன்று தனியார் வீட்டு வசதி குடியிருப்புகளும் அரசு துறையிலும் போட்டி போட்டுக் கொண்டு மழை நீரை சேமிக்காமல் வீணாக்கி சாலைகளில் நீரை பயன்படுத்துகிறது. இக்காட்சி வேளச்சேரி பகுதிகளில் காணப்படுவதை காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது மழை நீரை சேமிக்கவும் சாலை வாகன ஓட்டுகள் பாதுகாப்பு பாதுகாப்பாக செல்லவும் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.