ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காமராஜர் மக்கள் கட்சி நிவாரணம் வழங்கியது
29 12 24, ஞாயிறு
கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபெஞ்சல் புயல் புயலால் கடலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் மிக பெரிய பாதிப்புக்கு உள்ளானது. இதனால் மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையும் வீடு மற்றும் பயன்பாட்டுப் பொருட்களையும் இழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இந்த துயர சம்பவத்தை கருத்தில் கொண்டு காமராஜர் மக்கள் கட்சி பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு மாநில நிர்வாகிகளும் இளைஞர் அணி நிர்வாகிகளும் கடலூர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்
கள்ளக்குறிச்சி பகுதியில், கடந்த புயல், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல் – மாநிலச் செயலாளர் திரு இரா கதிரவன், மாநில இளைஞரணிச் செயலாளர் திரு ச இராஜீவ், மாநிலத் துணைத் தலைவர் திரு த காளிராஜா, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் சுகுணசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சசிகுமார், செங்கல்பட்டு மாவட்ட பொறியாளர் அணித் தலைவர் ஜா சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் -…