முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காமராஜர் மக்கள் கட்சி இரங்கல்
26/12/2024
இந்திய அரசியல்வாதியும், பொருளியலாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் 2004 முதல் 2014 வரை 13-ஆவது இந்தியப் பிரதமராக பணியாற்றினார். சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோதிக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிரதமராகப் பதவியில் இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான மன்மோகன் சிங், இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமரும் .
சவஹர்லால் நேருக்குப் பிறகு முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த பிறகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும் இவரே ஆவார்.
இன்றைய பாக்கித்தானின் கா நகரில் பிறந்த மன்மோகன் சிங், 1947 இந்தியப் பிரிப்பின் போது குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடி பெயர்ந்தார். ஆக்சுபோர்டில் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, சிங் 1966-1969 இல் ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றினார். லலித் நாராயண் மிஸ்ரா அவரை வணிக, தொழில்துறை அமைச்சின் ஆலோசகராக நியமித்தார். 1970கள், 1980களில், சிங் இந்திய அரசாங்கத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (1972-1976), ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (1982-1985), திட்ட ஆணைக்குழுவிம் தலைவர் (1985-1987) போன்ற பல முக்கிய பதவிகளை வகித்தார்.
பல இதய அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட மன்மோகன் சிங்,மே 2020 இல், தனது மருந்தின் எதிர்மறையான எதிர்விளைவு காரணமாக புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அக்டோபர் 2021 இல், சிங் பலவீனம், காய்ச்சல் காரணமாக மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
2024 திசம்பர் 26 அன்று, இதய நோய் மற்றும் முதுமை தொடர்பான பிரச்சனைகளினால் சிங், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு மன்மோகன் சிங் தனது 92-ஆவது அகவையில் இறந்தார்.
காமராஜர் மக்கள் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.