வழி விடாது சாலையை ஆக்கிரமித்து நிற்கும் மாடுகள்
8/11/2024
காரைக்கால் மேடு சாலை, இடும்பன் செட்டியார் சாலை போக்குவரத்து மிகுந்த பகுதி.வினாயக மிஷன் மருத்துவ கல்லூரி மாணவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் அதிகமாக பயணிக்ககூடிய பகுதி.
அவசர ஊர்தி அடிக்கடி செல்லக்கூடிய சாலை, வாகனங்கள் செல்ல வழி விடாது சாலையை ஆக்கிரமித்து நிற்கும் மாடுகள் தினம் தினம் இச்செயல் நடைபெறுகிறது,. நகராட்சி ஊழியர்களுக்கு தெரியாமல் போனது எப்படி என்பது என்பது மிகுந்த வியப்பை தருகிறது. ஒருவேளை நகராட்சி ஊழியர்களுக்கு சொந்தமானா மாடோ என கேள்வி எழுகிறது.
இரவு நேரங்களில் வேகமாக வாகனங்கள் செல்வதால் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது எனவே இது கரத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் மாடுகள் தங்காமல் இருக்கவும் வாகனங்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது