உளுந்தூர்பேட்டை தாலுக்கா காட்டு நெமிலி ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர்
23/12/2024
மழைக்கால காய்ச்சல், சளி இருமல் போன்றவைகளுக்கு எதிர்ப்பாற்றலை ஏற்படுத்திடும் வகையிலும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாகவும் உளுந்தூர்பேட்டை தாலுக்கா காட்டு நெமிலி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியரின் முழு அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பில் இன்று(23/12/2024) நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. சசி குமார் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த மாவட்ட தலைவர் திரு.சுகுண சங்கர், பொதுச் செயலாளர் திரு. சுப்பிரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அனைவரது சார்பிலும் வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு : இந்த பள்ளியை ஒட்டியிருக்கும் மாசுபட்ட நீர் குட்டையும், அதனால் ஏற்படும் கொசுக்கடி, துர்நாற்றம் ஆகியவை மத்தியில் இந்த பள்ளியின் 58 மாணவர்கள் தங்கள் எதிர்கால கல்வியை பயின்று வருகிறார்கள். பலரிடம் புகார் தெரிவித்தும் எங்களின் இந்த சிரமத்தை போக்க ஆளில்லை என்று மாணவர்களும், ஆசிரியகளும் உள்ளம் குமுறுகிறார்கள். பள்ளியில் கழிவறை வசதியும் இல்லாததால் பெண் பிள்ளைகளும், ஆசிரியர்களும் தினமும் தர்மச்சங்கடத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்