ஊழலை ஊக்குவிக்கும் மாடல்
03 12 2024
திராவிட மாடல் என்றால் ஊழலை ஊக்குவிக்கும் மாடல் என்று சொல்லலாம். இதற்கு ஆதாரம் என்ன என்பதை கீழே தருகிறோம்.
உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா, கணக்கில் வராத ரூபாய் 11.70 லட்சம் வைத்திருந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் சிக்கினார்; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆனால் இரண்டே வாரத்தில் திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கதி என்ன? விசாரணை முடிவடைந்து அவர் புனிதர் ஆகிவிட்டாரா? எந்த அடிப்படையில் அவர் திருநெல்வேலி மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்? இதுபோன்று மக்கள் மன்றத்தில் பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு வேறு வேலை இல்லை, இதற்கெல்லாம் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த வினாக்களை கடந்து செல்லாமல் பொறுப்புணர்வுடன் பதில் அளிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதை காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.