மக்கள் குறைதீர் கூட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு & கட்சி ஆலோசனைக் கூட்டம்
24/02/2025
கோர்ட் அரசு உத்தரவை மீறி சிவகங்கை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி சாலைகளில் நகராட்சி சாலைகளில் மீண்டும் பேனர் கலாச்சாரம் அதிக அளவு வைப்பது அதிகரித்து உள்ளதை அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது சம்பந்தமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானாமதுரை திருப்பத்தூர் தேவகோட்டை சிவகங்கை ஆகிய பகுதிகளில் ஆளுங்கட்சி சார்ந்த உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் கடை நிறுவனங்கள் சாலை ஓரங்களில் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும் ,
2013-ல் டுவீலர் சென்ற சுப்ஸ்ரீ என்ற இளம் பெண் மீது ரோட்டில் இருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார் அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் வாரி மோதியதில் சுபஸ்ரீ உயிரிழந்தார் இதனால் பிளக்ஸ் பேனர் வைக்க ஐக்கோர்ட் தடை விதித்து உள்ளது.
ஆரம்பத்தில் இந்த உத்தரவு அமல்படுத்த உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி காலப்போக்கில் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது, ஆகவே மேற்கூறும் பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறது
இன்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக என் .ஜி. ஓ காலனி பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும், மாவட்டத்தில் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது .
மாவட்ட தலைவர் அருளானந்து மாவட்ட பொதுச் செயலாளர் .மரிய லூயிஸ் மாவட்ட பொருளாளர். கே. சம்பத் திருப்பத்தூர் மகளிர் அணி தலைவர். நாகவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





