“ஹிந்தி திணிக்கப்படுகிறதா? தி.மு.க. கூறுவது பொய்!”

5/2/2025

‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு வழி செய்து, ஹிந்தி மொழியைத் திணிக்கிறது; ஹிந்தியை ஏற்றால்தான் மத்திய அரசு நிதி தருவேன் என்கிறது; மீண்டும் மொழிப் போர் வெடிக்கும்’ என்று தி.மு.க. கொதிக்கிறது. ‘ஹிந்தித் திணிப்பு என்று தி.மு.க. கூறுவது பொய்ப் பிரசாரம்; மும்மொழித் திட்டம் பற்றி மக்களிடம் கையெழுத்து வாங்குவோம்’ என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.

பல கட்சிகள் தி.மு.க.வோடு கோரஸ் பாடுகின்றன. இது குறித்து காமராஜ் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் ‘துக்ளக்’ தலைமை நிருபருக்கு அளித்த பேட்டி:

“புதிய கல்விக் கொள்கையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பாக பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை யில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை’யில், பள்ளிகளில் மூன்றாவது மொழி யாக ஹிந்தி மொழியை கற்பிப்பது பற்றி கூறப்பட்டிருந்தது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு – ஹிந்தி என் பதற்குப் பதிலாக ஒரு மாணவன், மூன்றாவதாக, தான் விரும்புகிற எந்த இந்திய மொழியை வேண்டு மானாலும் படிக்கலாம் என்ற முடிவை எடுத்து அறிவித்துள்ளது.”ஆனால் ஹிந்தியைத்தான் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது போல, உண்மையை மறைத்து, தி.மு.க.வும், அதன் தொங்கு சதையாகிவிட்ட கூட் டணிக் கட்சிகளும் பிரசாரம் செய் வது மலினமான அரசியல். ‘ஹிந்தி திணிப்பு’ என்ற குற்றச்சாட்டுக்கு இடமே இல்லை. மத்திய அரசின் அந்த கொள்கை செயல் திட்டத்தை முதலமைச்சரோ, கல்வி அமைச் சரோ முழுமையாகப் படித்தார்களா என்பதுதான் என் முதல் கேள்வி.


”மாநில ஆட்சியின் அவலங் களை, ஊழல்களை மூடி மறைக்க வும், மக்களின் கவனத்தை வேறு திசையில் திருப்பவும், தி.மு.க. எப் போதும் அதன் ஆயுதக் கிடங்கில் இருந்து எடுத்துப் பயன்படுத்துகிற, ஒரு துருப்பிடித்த ஆயுதமான ‘ஹிந்தி எதிர்ப்பு’ என்பதை மறுபடியும் தூக்கிக் கொண்டு, மொழிப் போர் வெடிக்கும்’ என்று உதயநிதி போன்றோர் பேசுவதில் மக்கள் சிக்குண்டு ஏமாறமாட்டார்கள்.

“மூச்சுக்கு முன்னூறு முறை ‘திராவிட மாடல்’, ‘திராவிட மாடல்’ என்று பேசுகிறவர்கள், திரா விட நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கையோ,மலையாளத் தையோ, கன்னடத்தையோ கற்க விரும்புகிற மாணவர்களை கற்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள்? இன் னொன்று – தன் பிள்ளையை என்ன படிக்க வைக்க வேண்டும் என்பது அவன் தகப்பன் முடிவு செய்ய வேண்டும். தனக்கு என்ன படிக்க விருப்பம் உள்ளதோ, அதைப் படிப்பதற்கு அந்த மாணவனுக்கு உரிமை இருக்க வேண்டும். இதில் அரசாங்கம் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை.

“வசதி படைத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி செயல்படுகிற பள்ளிகளில், ஹிந்தி உட்பட பல மொழிகளை விரும்பிக் கற்கிறார்கள். மத்திய அரசின் கல்வித் திட்டப் படி, ஏழை வீட்டுப் பிள்ளைகளுக் குக் கிடைக்கக் கூடிய அந்த வாய்ப்பை, மாநில அரசு ஏன் மறுதலிக் கிறது? இப்படித்தான் 30 ஆண்டு களுக்கு முன், காங்கிரஸ் அரசு மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளியை அமைத்துத் தருகிறோம் என்று கூறியது.

அது ‘உண்டு உறை விடப் பள்ளி’ களாக அமைய இருந் தது. அடித்தட்டு கிராமப்புற மக் களின் பிள்ளைகள் உணவு மற்றும் தங்குமிட வசதியோடு கல்வி பெற வாய்ப்பளித்த, அந்தத் திட்டத்தை யும், குறுகிய அரசியல் கண்ணோட் டத்துடன் எதிர்த்து, விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகளின் வாழ்க்கை யைப் பாழடித்தார்கள்.

”’ஹிந்தியை எதிர்த்து ஒரு லட் சம் பேர் சிறைக்குப் போவார்கள்’ என்று 1982-ல் கலைஞர் சொன் னார். அந்த ஒரு லட்சம் பேர். இன்னும் தயாராகவில்லை போலி ருக்கிறது. தமிழ் மொழிக்குக் குந்த கம் விளைவிக்கும் எந்தச் செயலி லும், மத்திய அரசு ஈடுபடாத நிலை யில், இப்போது மொழியின் பெய ரால் தி.மு.க. சுயலாப அரசியல் செய்யத் துடிக்கிறது.

மொழி சார்ந்த நலவோ, மக்கள் நலனோ இம்மி யளவும் இதில் இல்லை.. ஹிந்தித் திணிப்பு’ என்ற பெயரில் தி.மு.க. நடத்துதிராகமாசடி அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள்;

-தொகுப்பு:எஸ்.ரமேஷ்
துகளக் 5.3.20287

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *