உண்மையும், அன்பும் காந்திய நாணயத்தின் இரு பக்கங்கள், காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தலைவர் திரு தமிழருவி மணியன்
2/3/2025,திண்டுக்கல்
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் கடந்த அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உள்ள காந்திய ஆசிரமத்தில் சிறப்பு உரை நிகழ்த்தினார்.

காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுடன் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள். காந்திய நாணயத்தின் இரு பக்கங்களான உண்மை, அன்பு ஆகிய பண் புகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராமத்தில் மருத்துவர் பெ.ஜீவாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு, பசுமை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நில மீட்புக் கொடையாளி கிருஷ்வாம்மாள் ஜெகநாதன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மீனாட்சி சுந்தரம். தலைவர் தமிழருவி மணியன் முன்னிலை வகித்தனர்.பேராசிரியரும். எழுத்தான குமான பழனித்துரை, மராத்திய இசைக் கலைஞரும் ஓவியருமான தேஜாஸ்ரீ இங்கவாலே ஆகி போருக்குவிருதுடன் தலா ரூ.1,00,000 வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:
எல்லோருக்கும்,எல்லா நேரங்களிலும் தேவையாக இருப்பவர் காந்தியடிகள். உடைமையற்றவன் உள்ளத்தில் இருந்துதான் உண்மை பிறக்கும் என்றார் காந்தி. கல்வி முறையில் ஒழுக்கம் இல்லாததே இன்றைய சமூகத்தின் அவல நிலைக்கு காரணம். நீதிபோதனை வகுப்புகளும், ஒழுக்கம் சார்ந்த கருத்துகளும் பள்ளிகளில் கற்பிக்கப் படுவதில்லை.ஒவ்வொரு ஊராட்சியும், கிராமக் குடியரசாக இருக்க வேண்டும் என்பதே காந்தியடிகளின் கனவு. ஆனால், ஜாதிச் சான்று வழங் குதல், பிறப்புச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட குறைந்தபட் அதிகாரம்கூட ஊராட்சிகளுக்கு வழங்கப்படவில்லை.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெண்ணின் கனவு குறித்து ஐங்குறுநூறு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.பசி,பிணி,பகை இல்லாத அறம் சார்ந்த, அறமற்ற செயல்கள் இல் வாத சமுதாயம் அமைய வேண் டும் என்ற அந்தக் கனவு தளவாக வேண்டும். மருத்துவர் பெ.ஜீவாவின் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு தனக்கு வழங்கப்பட்ட பசுமை விருதுக்கான தொகை ரூ.ஒரு லட்சத்தை ஊர்க் கிணறு புனரமைப்பு இயக்க நிர்வாகி மதுமஞ்சரியிடம் வழங்கிய பேராசிரியர் க.பழனித்துரை, உடன்(இடமிருந்து) ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீனாட்சி சுந்தரம். நில மீட்புக் கொடையாளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், பெ.ஜீவா அறக்கட்டளைத் தலைவர் ஜெயபாரதி, மராத்திய இசைக் கலைஞர் தேஜாஸ்ரீ இங்கவாலே. இரு பக்கங்களிலுள்ள உண்மை. அன்பு என்ற இரு பண்புகனை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.




காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த போது.
