தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சனைகள் ஆகியவற்றை முன் வைத்து காமராஜர் மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம்
23/03/25
தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சனைகள் ஆகியவற்றை முன் வைத்து காமராஜர் மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம், ஊட்டி மாநகரில் ATC பேருந்து நிலையம் அருகில் நேற்று 22 /03 /25 மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணித் தலைவர் வள்ளி ரமேஷ் தலைமை வகித்தார். கணேசன்(மாவட்டத் தலைவர்), சிவகுமார்(மாவட்டச் செயலாளர்) முன்னிலை வகித்தனர்.

மாநிலப் பொதுச்செயலாளர் பா குமரய்யா முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாநில முதன்மைச் செயலாளர் சீ கிருஷ்ணமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் சு தியாகராஜன், மாநிலச் செயலாளர்கள் இரா ரெங்கராஜன், மீனா ஞானசேகரன், ஐஸ்வர்யா சுரேஷ், மாநில இளைஞர் அணித் தலைவர் மு சதீஷ்குமார், செயலாளர்கள் அ அரவிந்தன், அ அலெக்ஸ், மாநில மகளிர் அணி செயலாளர் இராதிகா மோகன், மாநில கொள்கை பரப்பு அணி செயலாளர் சு ஈஸ்வரன், மாநிலத் தகவல் தொழில் நுட்ப அணி துணைத் தலைவர் க அருண்குமார், செயலாளர் அ மோகன்குமார், மாநிலப் பொறியாளர் அணித் தலைவர் வரதராஜன் பழனிச்சாமி, மாநில மீனவர் அணித் தலைவர் இரா ச கண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.


மேலும் சர்ச்சில்(மாவட்டச் செயலாளர்), இந்திரா(மாவட்ட மகளிர் அணித் தலைவர்), சந்திரசேகரன்(உதகை தொகுதித் தலைவர்),அனுசியா(உதகை தொகுதி மகளிர் அணித் தலைவர்), ஆல்துரை(குன்னூர்தொகுதித் தலைவர்),சாவித்திரி(குன்னூர் தொகுதி மகளிர் அணித் தலைவர்) மற்றும் முன்னணித் தலைவர்களான குரு அய்யல்ராஜ்(மதுரை) இராஜ ரகுபதி(செங்கல்பட்டு) அ அருளானந்து (சிவகங்கை) த கார்த்திகேய முத்துக்குமார் (ஈரோடு), சி இராஜேந்திரன் (திருப்பூர்), வெள்ளிங்கிரி (திருப்பூர்), ச வாசு(தென் சென்னை), தீ இரவிச்சந்திரன் (மத்திய சென்னை) வி சந்திரன் (திருச்சி) ஹரிபாஸ்கர் (அரியலூர்), கலியமூர்த்தி (துறையூர்) ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுப்பிரமணி, மாவட்டப் பொருளாளர் நன்றி கூறினார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்பட்ட முழக்கங்கள் பின்வருமாறு:
- நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை என சரிந்து கொண்டு இருக்கும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை சரி செய்யப்பட வேண்டும்.
- நீலகிரி மாவட்ட மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிலகல்லாஹ் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்!
- சின்னஞ்சிறிய நீலகிரி மாவட்டத்தில் 74 டாஸ்மாக் கடைகள் மூலம், ஏழை மக்களிடம் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும்!
- அனைத்து தேயிலைத் தொழிற்சாலைகளிலும் பச்சைத் தேயிலைக்கு அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, விவசாயிகள் சுரண்டப்படாமல் காக்க வேண்டும்!
- ஆடு மாடுகள் கூட உண்ணத் தகுதியற்ற கேழ்வரகை கொடுப்பதை நிறுத்தி, தரமான கேழ்வரகை நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும்!
- ஆவின் பொருள்களுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள விலையையே நீலகிரி மாவட்டத்திலும் கடைப்பிடிக்க வேண்டும்!
- உயர்நீதிமன்ற கட்டளையையும் மீறி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்!
- பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து பள்ளிப் பிள்ளைகளை அங்குமிங்கும் ஓட விடுவதைத் தடுக்க வேண்டும்!
- சிறு விவசாயிகளுக்கு நில உடமை ஆவணங்களை வழங்கிட வேண்டும்!
- ஊராட்சிகளாகவே இருக்கத் தகுதியற்ற ஊர்களை பேரூராட்சியாக வைத்து இருப்பதால், மக்களின் வாழ்க்கைத் தரும் உயராமல் இருக்கும் நிலையை மாற்றிட வேண்டும்!
- இயற்கைப் பேரிடருக்கு ஆளாகும் பகுதி என்று தெரிந்திருந்தும் நீலகிரி மாவட்டத்தை காங்கிரீட் காடாக மாற்றும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
- அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி கல்வித் தரம் குறையாமல் காத்திட வேண்டும்!
- வேலை வாய்ப்பு, விவசாயப் பணிகள் இல்லாமல் கந்து வட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் மக்களை மீட்டெடுக்க வேண்டும்!
- பேருந்து நிலையங்களில் கட்டணமில்லா கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்!

வணக்கத்துடன்
பா குமரய்யா,மாநிலப் பொதுச் செயலாளர்,காமராஜர் மக்கள் கட்சி

