நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து காமராஜர் மக்கள் கட்சி ஊட்டி மாநகரில் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13/03/2025
நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து காமராஜர் மக்கள் கட்சி ஊட்டி மாநகரில் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
22.03.2025, சனிக்கிழமை மாலை சரியாக 3.00 மணிக்கு ATC பேருந்து நிலையம் அருகில் ஊட்டி 1, மாபெரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற இருக்கிறது.
பேருந்து நிலைய வசதி ,மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையம், இளைஞர்களின் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி , மக்கள் பொது பிரச்சினைகள், மருத்துவ வசதி – மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை வசதி, தேயிலைத் தோட்ட ஊழியர்கள் அடிப்படைத் தேவைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் , பொது கழிப்பிட வசதி என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென நீலகிரி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி தங்களை அன்புடன் அழைக்கிறது.

இளைஞர்களே! விவசாயிகளே!
தொழிலாளர்களே! வர்த்தகர்களே! பொதுமக்களே! திரண்டு வாரீர்! ஆதரவு தாரீர்!!