காமராஜர் சாலை, தோமாஸ் அருள் வீதி சந்திப்பு வளைவில் ஆளை விழுங்கும் சாக்கடை பள்ளம்

காரைக்கால் 19/04/2025

காமராஜர் சாலை, தோமாஸ் அருள் வீதி சந்திப்பு வளைவில் ஆளை விழுங்கும் சாக்கடை பள்ளம் உள்ளது. சற்று கவனகுறைவாக கடப்பவர்கள் பள்ளத்தில் விழுந்து கழிவுநீரில் உயிரை இழக்க நேரிடும்.இது மழை நேரத்தில் முழுமையாக விபத்தை ஏற்படுத்தும், உடனடியாக அப்பள்ளத்திற்கு பாதுகாப்பு அரண் ஏற்படுத்த வேண்டுகிறோம்.
சமீபத்தில் புதிய பேருந்துநிலையம் அருகில் பாதுகாப்பற்ற கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்து உயிர் இழந்ததை நகராட்சி நிர்வாகம் நினைவில் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *