காரைக்கால் பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்க சாலை பணிகளை மேற்கொள்ள கோரிக்கை
கடந்த 2018ம் ஆண்டு காரைக்கால் மாவட்டம் பூவம் முதல் வாஞ்சூர் வரை உள்ள நெடுஞ்சாலையை தற்போதைய நிலையிலிருந்து இருபுறமும் தலா 1.5மீட்டர் அகலப்படுத்தி மேம்படுத்த ரூபாய் 10கோடியில் திட்டப்பணியை தொடங்கினார்கள், ஆமை வேகத்தில் நடந்த அப்பணி 6ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது!

சாலையின் மொத்த நீளத்தில்40%சதவீதம் மட்டுமே அகலப்படுத்தி உள்ளார்கள்! மீதி பகுதிகள் அனைத்தும் பள்ளமும் படுகுழியாக காட்சியளிக்கிறது! நெடுஞ்சாலையில் கூட சில பகுதிகள் சிதிலமடைந்து பள்ளங்களாக உள்ளது.

துறைமுகத்திலிருந்து அதிக எடைகளுடன் வரும் கனரக வாகனங்களால் சாலையில் உள்ள சிறிய பள்ளங்கள் அதன் அழுத்தத்தால் பெரிதாக மாறி போகிறது! மேலும் எதிரே தொடர்ந்து வரும் கனரக வாகனங்களுக்கு வழி விடும் போது சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளங்களில் வாகனத்தை இயக்க வேண்டிய நிலையில் மரண பயத்துடன் பயணிக்க வேண்டிய நிலையில் வாகன ஓட்டுனர்கள் உள்ளனர், இரவு நேரத்தில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள்.மேலும் நாளுக்கு நாள் சாலையின் அகலம் குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
7ஆண்டுகளுக்கு முன்பு 10கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பணி நிறைவு பெறாதது ஏன் என்பது கேள்வி குறியாக உள்ளது!
மேதகு புதுச்சேரி துணை-நிலை ஆளுநர் அவர்கள் தீர விசாரித்து 6ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் இப்பணியை விரைவில் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.