ஜே என் என் கலை அறிவியல் கல்லூரியில் மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா
சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜே என் என் கலை அறிவியல் கல்லூரியில் மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா 12/04/2025 நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.



மேலும் பட்டமளிப்பு விழாவில் பரிசுகளையும் பதக்கங்களை வழங்கியும், கல்விச் சான்றிதழ் வழங்கியும் மாணவ மாணவியருக்கு தலைவர் அவர்கள் பட்டமளிப்பு விழா பதக்கங்களை வழங்கினார்.




இதில் கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர், ஆசிரியர் பெருமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் 560 மாணவியர்களுக்கு தலைவர் அவர்கள் தன்னுடைய கரங்களால் பட்டங்களையும் சிறப்பு பரிசுகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றி சமூகத்தின் நலன் பெண்களின் முன்னேற்றம் வாழ்வியல் குறித்தும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு குறித்தும் உரையாற்றினார்.











