காமராஜர் காந்தியத்தின் கடைசி கருணை – தலைவர் தமிழருவி மணியன் பேட்டி
14/07/2025
கால வெள்ளத்தில் கரைந்து காணாமற் போரும் நன்றி உள்ள கடைசித் தமிழனும் மறக்கக் கூடாத அரசியல் மகரிஷியும் பெருந்தலைவர் காமராஜர், நல்ல மனிதர்களைக் காண்பதே அரிதாகிவிட்ட மண்ணில் தெய்வ குணங்க ளோடு வந்த திருமகன் அவர்.
கல்லாமையை கருவறுக்கவும் இவ்லாமையை இல்லா தொழிக்கவும் தமிழகம் முழுவதும் வேள்வி நடத்திய நாயகன் காமராஜர், வாழ்வின் அகல விதமான இன்பங்களையும் ஒன்று விடாமல் அனுபவிக்கத் துடிக்கும் அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு இடையில் சகலத்தையும் சமுதாய நலனுக்காகயே அர்ப்பணித்த மகத்தான மனிதர் காமராஜர்.

