கேரள மாநில மேனாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் அச்சுதானந்தன் மறைவிற்கு, காமராஜர் மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கல்
22/07/2025
வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் (20 அக்டோபர் 1923 – 21 சூலை 2025) கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். 82 வயதில், அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டவர்களில் மிக வயதானவர் இவர். இந்திய மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியுடன் இவர் இணைந்திருந்தார். 2016 முதல் 2021 வரை கேரள நிர்வாக சீர்திருத்தங்களின் தலைவராக மாநில அமைச்சரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இது கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
