சமூக ஒற்றுமையும்… அரசியல் சாசனமும்…
14/07/2025
அறிவார்ந்த சமூக சிந்தனையாளர்கள் இன்று அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றனர் சமூக ஒற்றுமையை பாதுகாக்க அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை உரிமைகளை மக்களிடத்தில் எடுத்துச் சென்று விளக்கக் கொள்கை ஒன்றை உருவாக்குங்கள் என்பது தான் அந்த கோரிக்கை அரசு கொண்டு வருகிற சமூகம் மேம்பாட்டு செயல்பாடுகளின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவில்லை என்பதை அரசுகள் ஒப்புக்கொள்கின்றன ஆனால் அதற்கான மூல காரணத்தை தொடர அரசுகள் மறுக்கின்றன.
