ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தலைவர் ஹரிபாஸ்கர் தலைமையில் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச பாட உபகரணங்கள் வழங்கும் விழா
14/07/2025
பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செய்து வரும் அரியலூர் மாவட்டம் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கியும் பாட உபகரணங்கள் வழங்கியும் விழாவை கொண்டாட இருக்கிறது.
அணை குடம் ஊராட்சி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியலூர் காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு ஹரி பாஸ்கர் அவர்கள் , தலைவர் காமராஜர் பிறந்த நாளை july 15 முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிட்டு மாணவ மாணவியருக்கு இலவச விலை இல்லா பாட உபகரணங்கள் வழங்க உள்ளார். கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட உறுப்பினர் ஆகியோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

