ஜே என் என் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் முன்னிலையில் தலைவர் தமிழருவி மணியன் எழுச்சி உரை
9/07/2025
சென்னை அடுத்த ஜே என் என் கல்லூரி கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழாவில் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் . இதில் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரியின் தாளாளர் என கல்லூரி நிர்வாகம் கலந்து கொண்டனர். விழாவினை தலைவர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
500க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், சமுதாய நோக்கம் பற்றியும் சமுதாயத்திற்கு மாணவர்கள் எவ்வாறு பங்காற்ற வேண்டும் எனவும் தலைவர் தமிழருவி மணியன் மாணவர்களுக்கு பல்வேறு விளக்கங்களுடன் கருத்துக்களை பகிர்ந்தார் .விழாவில் தலைவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.



