திமுகவை எதிர்க் கும் அனைத்து கட்சிகளும் ஒரு மித்த கருத்தோடு ஒன்றிணைய வேண்டும்
15/07/2025
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக, திமுகவை எதிர்க் கும் அனைத்து கட்சிகளும் ஒரு மித்த கருத்தோடு ஒன்றிணைய வேண்டும்.
காமராஜர் 123-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை புரசை வங்கத்தில் நடைபெற்றது. ஜி.கே.வாசன் தலைமை வகித் தார். காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழருவி மணியன் முன்னிலை வகித்தார்.


விழாவில் காமராஜர் வழியில் நேர்மையாக பயணம் செய்யும் கட்சி, எப்போதும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும். நமக்கு ஏற்பட்ட சோதனைகள் வேறு கட்சிக்கு நடந்திருந்தால், அரசியலை விட்டே போயிருக்கும்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருள் பழக்கம், பாலியல் வன் கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித் துக் கொண்டே செல்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு, திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஒன்றுசேர வேண்டும்.
தமிழகத்தில் நூறு சதவீத வளர்ச்சியை ஏற்படுத்த வேண் டுமானால், மத்திய, மாநில அரசுகள் இடையே இணக்கம் தேவை. அதற்கு ஏற்ற கூட்டணி யோடு, வெளியில் இருக்கும் அத் தனை கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக, ஒருமித்த கருத் துடைய கட்சிகளை ஒன்றுசேர்க்க பணியாற்றும்.
முன்னதாக, தமிழருவி மணி யன் பேசும்போது, “இந்த மண் ணில் மீண்டும் நேர்மையான, தூய்மையான அரசியல் நடை பெற வேண்டும். அந்த வகை யில், காமராஜர் வழியில் தடம் மாறாமல் நடக்கும் ஜி.கே.வாசன் பின்னால் தமிழகம் திரள வேண் டும் என்பது என் ஆசை” என்றார்.