நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசு
16/07/2025
மேனாள் தமிழக முதல்வர் காமராஜர் பிறந்த ஜூலை 15 காமராஜர் மக்கள் கட்சி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கட்சியின் பொருளாளர் திரு பொன் கோவிந்தராஜ் பள்ளி மாணவர்களுக்கு தலைவர் தமிழருவி மணியன் எழுதிய காமராஜரின் சாதனைகள் புத்தகங்கள் பரிசாக வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
