மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
12/07/2025
அரியலூர் மாவட்ட மக்கள் பிரச்சனைகளை முன்னிட்டு காமராஜர் மக்கள் கட்சி சார்பாக 26 7 2025 அன்று காலை 11 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி-இல் காந்தி பூங்கா எதிரில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்.
மேலும் அரியலூர் மாவட்ட வளர்ச்சி பற்றியும், வேலைவாய்ப்பு ,மருத்துவம் ,சுகாதாரம், குடிநீர் தட்டுப்பாடு ,அடிப்படை பிரச்சனைகள் ,விவசாயம் சார்ந்த தொழில் பிரச்சனைகள் உள்ளடக்கிய கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், திமுக அரசின் அவல நிலையை சுட்டிக் காட்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும்,காமராஜர் மக்கள் கட்சி அரியலூர் மாவட்ட தலைவர் திரு ஹரி பாஸ்கர் அவர்கள் அழைப்பு விடுக்கிறார்.
