மதுவற்ற மாநிலம் ஊழலற்ற நிர்வாகம் தமிழகத்தில் மலர காமராஜர் மக்கள் கட்சி அழைப்பு
14/07/2025
தமிழகத்தின் ஊழலற்ற நிர்வாகத்தை சிறந்த ஆளுமை திறனை வெளிப்படுத்திய மேனாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் (ஜூலை 15 )பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு போற்றுதலுக்குரிய காமராஜரின் உண்மை தொண்டன் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் ஆணைக்கிணங்க காமராஜர் மக்கள் கட்சி ,பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அரியலூர், மதுரை ,சிவகங்கை ,கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மூலம் மக்கள் நல பணிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பணிகளை முன்னெடுத்து செயல்படுத்த இருக்கிறது.
காமராஜர் பிறந்தநாளில் ஊழலற்ற நிர்வாகம் மதுவற்ற மாநிலம் தமிழகத்தில் மலர காமராஜர் மக்கள் கட்சி தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.
