மின் கம்பிகள் இணைக்கும் பணிகளும் தரமற்ற நிலையில் பயன்பாட்டில் உள்ளது
29/07/2025
3/129-எச் பாரதி 1வது குறுக்குத் தெரு வெட்டுவான்கேணி சென்னை – 600 115 பகுதிகளில் மின் இணைப்புகள் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதில் மிகப்பெரிய முறைகேடுகளும், TNEB ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஆதாரங்கள் புகைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதிமின் திறன் கொண்ட மின் கம்பிகள் இணைக்கும் பணிகளும் தரமற்ற நிலையில் பயன்பாட்டில் உள்ளது. இதில் பொதுமக்கள் உயிர் பாதுகாப்பில்லாமல் பயணிக்க கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள், சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
மின்சாரத் துறையின் தரமற்ற செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டியும், ஆபத்து இல்லாத தரமான மின் இணைப்புகள் செயல்படுத்த நேரடி ஆய்வு செய்து துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ள காமராஜர் மக்கள் கட்சி தென்றலே மாவட்டச் செயலாளர் மாவட்ட தலைவர் வாசு அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு வைத்துள்ளார்.


