காரைக்காலின் நீண்ட கால பிரச்சினையாகநகர் பகுதியில் போக்குவரத்து இடையூறு,
24/08/2025
காரைக்கால் சிங்கார வேலவர் சாலையில் உள்ள வடிவாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது! வாய்க்காலில் உள்ள கோரைகள் ஆறடி உயரத்திற்கு மேல் உள்ளது! 6மாதத்திற்கு முன்பு ஒரு மனித உயிரை பழி வாங்கியது! இன்று பசுமாடு சேற்றுசகதியில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது, தீயணைப்பு துறையினர் உதவியால் உயிர் தப்பியது!
வடிவாய்க்கால் தூர்வாராத காரணத்தால் மழைநீர் வடிய முடியாமல் காமராஜர் சாலையில் மழைநீர் தேங்குகிறது இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.


காரைக்காலின் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வருவது நகர் பகுதியில் போக்குவரத்து இடையூறு, பெரும்பாலான பகுதிகளில் வாகன நிறுத்த இடம் ஆக்கிரமிப்பு! புதிதாக வரும் உயர் அதிகாரிகள் இவைகளை சரி செய்ய ஆய்வு செய்து கொண்டு இருக்கும் போதே மாற்றலாகி போய் விடுவார்கள்.
போக்குவரத்து பிரச்சினைக்கு கிரீடம் வைத்தார் போல் ரயில்வே கேட் பிரச்சினை! தொடர்ந்து சரக்கு ரயில் செல்வதால் கேட் மூடப்படுகிறது அதனால் குறித்த நேரத்தில் மக்கள் தனது தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்படுகிறார்கள்,
ரயில்வே கேட் மூடி இருக்கும் போது முறையாக வாகனங்களை நிறுத்துவது இல்லை. எதிரே உள்ளவர்கள் எப்படி வருவார்கள் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் இரு புறமும் அடைத்துக்கொண்டு நிற்கிறார்கள் அதனாலேயே நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
காரைக்காலில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது! பல ஆண்டுகளாக தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த “காரைநகராட்சி” எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் பெருகி தெருவில் நடந்தும், இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது, நாய்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு வாகனங்களில் செல்பவர்களை விபத்துக்கு ஆளாக்கிறது! கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 37லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக அரசு ஆவணங்கள் கூறுகிறது! தெருநாய்களின் தொல்லை அபார நிலையை எட்டி இருப்பதாலும், நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருப்பதாலும் நாட்டின் உச்ச நீதி மன்றம் தாமாக முன் வந்து தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது! இதை எதிர்த்து ஒரு சிலர் நீதி மன்றம் சென்றாலும் எவ்வித தடையும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
காரைக்கால் மாவட்ட நிர்வாகம், காரைநகராட்சி நிர்வாகம் இணைந்து தெரு நாய்களை பிடிக்க உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.

நடவடிக்கை எடுக்க என காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.