காரைக்கால்-பேரளம் பகுதியில் பயிற்சி ரயில் எஞ்சின்களை இயக்குவது ஏன்?
ஆவடியில் ரயில்வே பயிற்சி மையம் உள்ளது.இது 1980ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இங்கு தெற்கு ரெயில்வே உட்பட சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி மண்டலங்களை சேர்ந்த ரயில்வே ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது காரைக்கால்-பேரளம் பகுதியில் பயிற்சி ரயில் எஞ்சின்களை இயக்குவது ஏன்.


இரயில் எஞ்சின் செல்வதாக இருந்தாலும் கேட் மூடப்பட்டு நீண்ட நேரம் மக்கள் வெயிலில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது! ஏற்கெனவே சரக்கு ரயில் நேரவரையறையின்றி செல்வதால் பொதுமக்களும், மாணவமாணவிகள் பெரும் அல்லல்படும் நிலையில் உள்ளனர், இதில் ரயில் எஞ்சின் மட்டும் பல முறை செல்கிறது!
இப்பகுதியில் பயிற்சி ரயிலஎஞ்சின்கள் இயக்குவதை நிறுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்.

மேலும் சரக்கு ரயில் போக்குவரத்து கால அட்டவணையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும், அந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் தாங்களின் தேவைகளை மாற்றிக்கொள்வார்கள் மக்கள் சிரமப்படாமல் இருப்பார்கள் ரயில்வே நிர்வாக உடன் வெளியிட காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.
காரைக்காலில் பெருகி வாரும் வாகனங்கள்! குறுகி வரும் சாலைகள்!
காரைக்கால் முக்கிய வீதிகளில் தார்சாலை போடும் போது முன்பு இருந்ததை விட குறுகிய நிலையிலேயே போடுகிறார்கள்! சாலையை மேம்படுத்தும் போது சாலையின் அகலத்தை அதிகரிக்காமல் குறுகிய நிலையில் கொண்டு செல்வது ஏன்? மாநில நெடுஞ்சாலையிலும் இதே நிலை தொடர்கிறது!

