மதுவுக்கு எதிராக போராட்டத்தையும், சுதந்திர தாகத்தையும் ஏற்படுத்திய மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பூங்காவில் மது பாட்டில்களும் தீய பழக்கங்கள் உடைய உபகரணங்களும் பரவலாக காணப்படுகிறது
24/08/2025
கடந்த 23 8 2025 அன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் தொகுதிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அடிப்படைத் தேவைகளை அரசு நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்ய வேண்டுமென கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் காமராஜர் மக்கள் கட்சி நடத்தியது.
மேலும் ஆர்ப்பாட்டத் திடலுக்கு அருகே உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி பூங்கா பராமரிப்பு இன்றி இருப்பதை கண்டறிந்து காமராஜர் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் பேராசிரியர் காளிராஜா தங்கமணி அவர்களின் தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட நிர்வாகம் செயல்பாடாக நிர்வாகமாக இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. காரணம் மதுவுக்கு எதிராக போராட்டத்தையும் சுதந்திர தாகத்தையும் ஏற்படுத்திய மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பூங்காவில் மது பாட்டில்களும் தீய பழக்கங்கள் உடைய உபகரணங்களும் பரவலாக காணப்படுகிறது. இதை கண்டறிந்த காமராஜர் மக்கள் கட்சி தூய்மை பணிகளை மேற்கொண்டது.







இந்த ஆர்ப்பாட்டத்தில்
சோழகங்கம் ஏரி புனரமைப்புக்கு 660 கோடி தேவைப்படும் நிலையில் 12 கோடி மற்றும் ஒதுக்கி உள்ள தமிழக அரசைக் கண்டிப்பதுடன், உடனடியாக உரிய நிதியை ஒதுக்கி கொள்ளிடத்தில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான வழித்தடத்தை உருவாக்க வேண்டும்,சிமெண்ட் ஆலைகள் வெளித் தள்ளும் மாசுகளில் சிக்கியுள்ள அரியலூர் மாவட்டத்தை அழிவின் விளிம்பில் இருந்து காக்கக் வேண்டும்,

சிமெண்ட் ஆலை லாரிகளால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளினால் உருவாகும் உயிரிழப்புகளைத் தடுத்திட சிமெண்ட் ஆலைகளுக்கு, சுரங்கங்களில் இருந்து சென்றுவர தனி சாலை அமைக்க வேண்டும்,யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை முறையாகப் பராமரிக்க வேண்டும்,
ஜெயங்கொண்டத்தில் இராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்,அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் காட்டுமன்னார்கோவில் வழியாக சிதம்பரத்துக்கு இரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும்,

ஜெயங்கொண்டத்திலிருந்து கும்பகோணத்திற்கு இரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும்,முந்திரி தொழிற்சாலை அமைத்து முந்திரிப் பழம், கொட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்ய வேண்டும்,
ஜெயங்கொண்டம் நகரில், ஆங்காங்கே (2002 வரை இருந்தது) இலவசக் கழிப்பறைகள் அமைக்க வேண்டும்,மாலையில், பள்ளிகள் விடும் நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாத பேருந்துகளை இயக்க வேண்டும்,
சோழகங்கம் பொன்னேரியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
