மரணக்குழிகளில் காரைக்கால் நகராட்சி
12.9.2025
காரைக்கால் நகராட்சி மரண குழிகள் காரைக்கால் பெருமாள் கோயில் வீதி, காமராஜர் சாலை சந்திப்பில் இருபுறமும் பாதுக்காப்பற்ற முறையில் கழிவுநீர் பாதை பெரும் குழியாக உள்ளது. இதைப்போல் காமராஜர் சாலை மாமாதம்பி மரைக்காயர் வீதி சந்திப்பும் இதே நிலைதான். இந்த மரணக்குழிகளில் பல பேர் விழுந்து படுகாயத்துடன் செல்போன்,பணம் போன்ற பொருள் இழப்புடன் உயிர் பிழைத்து உள்ளார்கள், காரணம் நகராட்சியும் செயல்பாடு இல்லாத தன்மையே என்பது மக்களின் மனநிலை என்ற கேள்வியை அப்பகுதினர் கேட்கிறார்கள்.

இனி வருவது மழைக்காலம் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதி மழைநீரில் ரோடு எது பள்ளம் எது என்று தெரியாது. 
காரைநகராட்சி விரைந்து தீர்வு காண வேண்டுகிறோம்.





காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதி போக்குவரத்து மிகுந்த பகுதி! இங்கு ” அன்னை தெரஷா மேல்நிலைப்பள்ளி ” எதிரில் சாலை ஓரத்தில் ஒரு மரம் பழுதடைந்து, பலவீனமான நிலையில் எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய ஆபத்தில் உள்ளது!
வாகன ஓட்டிகள் பள்ளி மாணவிகள், மற்றும் பொதுமக்கள் மரத்தின் கீழ் செல்லும்போது விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது! ஆபத்தான மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவது பாதுக்காப்பிற்கு அவசியமானது! ஆகவே வனத்துறை, காரைநகராட்சி மரத்தை அப்புறப்படுத்த உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்


