சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் முயற்சியில் ஆபத்தான நிலையில் இருந்த நியாய விலை கடை புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
6/06/2024
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக 2023 ஆம் ஆண்டு வரை ஆபத்தான நிலையில் இருந்த காரைக்குடி முத்துரணி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன் கடையை மாற்றக்கோரி மாவட்டத் தலைவர் திரு அருளானந்து மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி பிற அணி நிர்வாகிகள் ஆகியோர் முயற்சியால் கையெழுத்து இயக்கம் நடத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சுமார் ஆறு மனுக்களாக கொடுக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டு 6.. ஜூன் புதிய கட்டிடத்திற்கு நியாய விலை கடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி மூலம் தொடர்ந்து மக்களின் ஆதரவோடும் போராட்டங்களும் மனுவாகவும் போராட்டங்களாகவும் மனுக்கள் ஆகவும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை எழுப்பப்பட்டதன் காரணமாக இந்த மக்கள் பணி சாத்தியமானது.
காமராஜர் மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று மக்களின் நிலையை அறிந்தும் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் காரைக்குடி வட்டார சிவில் சப்ளை தனி தாசிலர் அவர்களுக்கும் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி