கள்ளக்குறிச்சி கள்ள சாராய இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் , இறப்பு குறித்த விசாரணைக்கு சி பி ஐ அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் காமராஜர் மக்கள் கட்சி சென்னையில் போராட்டம்
3/07/2024, சென்னை
கள்ளக்குறிச்சி கள்ள சாராய இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் ,கள்ளச்சாராய இறப்பு குறித்த விசாரணைக்கு சி பி ஐ மத்திய புலனாய்வு துறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும், தமிழகத்தில் மக்கள் நலனுக்காக, இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்தும், காமராஜர் மக்கள் கட்சி சார்பாக இன்று 3/07/2024 சென்னை சைதாப்பேட்டை முனைப்பிலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பயணம் மேற்கொள்ளப்பட்டது.
நமது காமராஜர் மக்கள் கட்சி, தமிழ்நாடு மது ஒழிப்பு போராட்டக் கூட்டமைப்புடன் இணைந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் பயணம் மேற்கொண்டது .
இதில் நமது மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய திரு.குமரய்யா தலைமையில், மாநில மகளிர் அணி தலைவர் திருமதி வள்ளி ரமேஷ் , மாநிலச் செயலாளர் திரு ரங்கராஜன், மாவட்ட தலைவர் திரு ரவிச்சந்திரன் ,, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு. ராஜா ரகுபதி , ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு மணிவண்ணன், திரு அசோக் குமார், நெற்குன்றம் சங்கர், பள்ளிக்கரணை முனியாண்டி, திருமதி இந்திரா, வடசென்னை பிரபாகரன், விருகம்பாக்கம் குமாரசாமி, தாம்பரம் சீனிவாசன், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி பொதுச் செயலாளர் சக்திவேல் துணைத்தலைவர் ராஜ்குமார், ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலச் செயலாளர் திரு ரங்கராஜன் தலைமையில் கண்டன கோஷங்களும் ,கோரிக்கையும் பொதுமக்கள் முன் வாய்மொழியாக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
காவல்துறை காமராஜர் மக்கள் கட்சியின் நிர்வாகிகளை கைது செய்து சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை 6:45 மணி அளவில் காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை விடுவித்தனர்.
நன்றி,தகவல் தொழில்நுட்ப அணி, காமராஜர் மக்கள் கட்சி
போராடுவோம் வெற்றிபெறுவோம்