கட்சி அமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் கோரிக்கை
7/4/2024
தலைவர் தமிழருவி மணியன் அவர்கள், கடந்த காணொளிக் கூட்டத்தில் கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை தெளிவாக விளக்கியுள்ளார். அதன் அடிப்படையில்,
மாவட்டத் தலைவராகிய தாங்கள்., பொதுச் செயலாளர் ஒருவர், செயலாளர் நால்வர், துணைத் தலைவர்கள் நால்வர். பொருளாளர் ஒருவர் என்ற பதவிகளுக்கு (மாவட்டத் தலைவரையும் சேர்த்து II பேர்) தகுதியான மனிதர்களை நியமிக்க வேண்டும்.
இந்த நியமனங்கள்,மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஒரு மகளிர் பிரதிநிதி, ஒரு தலித் பிரதி ஆகியோரைக் கொண்டதாகவும் அமைய வேண்டும்.
மாவட்டப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், தாங்கள் வசிக்கும் தொகுதிகளுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டு, மேலே குறிப்பிட்டது போன்ற கட்டமைப்பைத் தொகுதிகளில் உருவாக்க வேண்டும். தலைவர் அவர்கள் குறிப்பிட்ட “2025 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு தொகுதியிலும் 3000 உறுப்பினர்கள்” என்ற இலக்கினை எட்டிடவும். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும்.
எனவே, தாங்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், தங்கள் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை நிறைவு செய்து அனுப்ப வேண்டுகிறேன்.
கட்சி அமைப்பை வலுப்படுத்தும் இந்தப் பணி, மாநிலச் செயலாளர் திரு ரெங்கராஜன் (94456 76568) அவர்களால் ஒருங்கிணைக்கப்படும்; திரு ரெங்கராஜன் (94456 76568) தங்களோடு தொடர்பில் இருப்பார். அவருக்குத் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.