முறையான பராமரிப்பு இல்லாமல் அனைத்தும் பயனற்ற நிலையில் காரைக்கால்
1/9/2024
காரைக்கால் மைய பகுதியில் கடந்த 35ஆண்டுகளாக பயனற்ற நிலையில் இருக்கும் பழைய பேருந்து நிலையம், இடித்து தரைமட்டமாக்கப்பட்ட “டைமண் தியேட்டர்” இருந்த இடம், காந்தி பூங்கா, காந்தி காலனி, தற்காலிக நேரு மார்கெட், பாரதியார் வீதி திருமண மண்டபம், டணால் தங்கவேல் கலையரங்கம் இவை அனைத்தும் நகராட்சிக்கு சொந்தமான இடம்.
முறையான பராமரிப்பு இல்லாமல் அனைத்தும் பயனற்ற நிலையில் உள்ளது! காரைக்காலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என சொல்லிக்கொண்டு வந்தவர்கள்,ஆட்சிகள் பல மாறினாலும் “காரைக்கால் புறக்கணிப்பு என்ற காட்சி மட்டும் ஒரே மாதிரியாக உள்ளது.
தற்காலிக நேரு மார்கெட் இடத்தை பராமரிப்பு வேலைகள் செய்து அங்கே ” சண்டே மார்கெட்” துவங்கினால் அதில் பல இளைஞர்கள் சிறு தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
நகர பகுதியில் வாகன நிறுத்தத்துடன் கூடிய திருமண மண்டபம் இல்லாத நிலையில் நகராட்சி திருமண மண்டபத்தையும், கலையரங்கத்தையும் இணைத்து நவீன வசதியுடன் புதிய திருமண மண்டபத்தை உருவாக்கினால் நகராட்சிக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதுடன், பொதுமக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாகவும் இருக்கும்! புதுச்சேரி உள்ளாட்சி துறை நிர்வாகம் காரைக்கால் பகுதி மேல் சிறப்பு கவனம் செலுத்த காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
நன்றி காரைக்கால் ,காமராஜர் மக்கள் கட்சி