வாய்க்காலை தூர் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்
11/9/2024
காரைக்கால் நகரப்பகுதியில் உள்ள “முல்லை நகரில்” அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. அக்கட்டிடத்தின் வளாகத்தில் கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்துள்ளது.
அதன் அருகில் உள்ள வடிவாய்க்கால் தூர்வாராத காரணத்தால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திகேந்திரமாக விளங்கிறது .சிறிய மழை பெய்தால் வாய்காலில் உள்ள கழிவுகள் அங்கன்வாடி வளாகத்திற்கு வந்து சேருகிறது.
குழந்தைகள் உள்ள இடம், கொசு, கழிவுகளால் தொற்றுநோய், டெங்கு,மலேரியா ஏற்படும் அபாயம் உள்ளது, அங்குள்ள கருவேலக்காடுகளை அழித்து, வாய்க்காலை தூர் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.