ஆளுநருக்கு சாதகமாக செயல்படும் பொதுப்பணித்துறை மக்களுக்கு பாதகம் விளைவிப்பது சரியா…?
14/11/2024
காரைக்காலில் மிகுந்த போக்குவரத்து பகுதியான காமராஜர் சாலையில் ஒரு பகுதியில் பொதுப்பணி துறை பணியும், மறுபகுதியில் இரயில்வே பணியும் நீண்ட காலமாக மந்தநிலையிலேயே நடந்து வருகிறது.அதனால் மக்கள் படும் தொல்லைகள் மிக அதிகம். சொகுசு காரில் வரும் ஆளுநர் அவர்களுக்காக சிறு சிறு பள்ளங்களை கூட செப்பனிடம் பொதுப்பணி துறை,
நீண்ட காலமாக தினம் தினம் பொதுமக்கள், பள்ளிவாகனங்கள், இரண்டு சக்கரவாகன ஓட்டிகள் படும் துயரம் அறியாதது ஏன்?
அப்பகுதியில் பெரும் பள்ளங்களால் வாகனங்கள் பழுதடைவதுடன், பள்ளங்களை தவிர்த்து செல்ல முயற்சிக்கும் போது எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது! நீண்டகாலமாக பி.கே.சாலை, காமராஜர் சாலை சந்திப்பில் முக்கால்வாசி சாலையை பெயர்த்து அப்படியே போட்டு வைத்து இருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி விபத்துக்கு ஆளாகிறார்கள் இது தினம் தினம் நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம் உடன் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது.