தமிழை வளர்க்கும்(!?) சென்னை மாநகராட்சி
25/02/25
மும்மொழித் திட்டத்தால் தமிழ் அழிந்து விடும் என்று தமிழக முதல்வர், துணை முதல்வர் தொடங்கி திமுகவினர் பலரும் போர்ப் பரணி நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புற்றீசல் போல பரவுவதை கண்டும் காணாமல் இருந்து, பாட மொழியாகத் தமிழே இல்லாத கல்வி முறை வளர்ந்திடக் காரணமான பரம்பரையில் வந்தவர்கள், தமிழை பேச மட்டுமே தெரிந்த ஒரு தலைமுறை உருவாவதற்கு வழிவகுத்தவர்கள், தங்கள் குடும்ப நிறுவனங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டாதவர்கள், தங்கள் குடும்பம், கழகத்தவர் குடும்பம் நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை தராதவர்கள், நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும் என்ற பச்சைப் பொய்யைப் பரப்புரை செய்தவர்கள், அரசுக் கட்டிடங்களில் “தமிழ் வாழ்க” என்ற மின்னொளிப் பலகைகளை வைப்பதால் மட்டுமே தமிழ் வளரும் என்ற பகுத்தறிவு கொண்டவர்கள், மீண்டும் ஓர் ஏமாற்று வேலைக்குத் தயாராகி விட்டார்கள்; தமிழக மக்களே! இவர்களிடம் விழிப்பாய் இருங்கள்.

நிற்க! இவர்கள் தமிழை வளர்க்கும் அழகைப் பார்ப்போமா? சென்னை மாநகராட்சி மண்டல, வட்ட அலுவலகப் பெயர்ப் பலகைகளில் வார்டு கவுன்சிலர் என்று குறிப்பிடப்படுகிறது.

வார்டு கவுன்சிலர் என்பதை “வட்ட மாமன்ற உறுப்பினர்” என்று குறிப்பிடத் தடையாய் இருப்பது எது?. இது குறித்து அரசு உரிய விளக்கம் தர வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி.