ஈரோடு மாவட்டத்தில் 11-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
22/02/2025
சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு, ஈரோடு காளைமாடு சிலை ரவுண்டானா சிம்னி ஓட்டல் அருகில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


காமராஜர் மக்கள் கட்சி ஈரோடு மாவட்டம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
1) சாக்கடை, ஆலைக் கழிவுநீர்கள், குடிநீர் ஆதார ஆறுகளில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) மஞ்சள் வாரியத்தின் மண்டல அலுவலகம் ஈரோட்டில் அமைக்கப்பட வேண்டும்.
3) கோபி நல்லகவுண்டன் பாளையம் அருகில் அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் நுழைவு வாயிலுக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்.
4) நிலத்தடி நீர் மாசுபடாமல் காத்திட பொது சுத்திகரிப்பு நிலையம் ஈரோட்டில் நிறுவப்பட வேண்டும்.
5) காளிங்கராயன் கால்வாய், காவிரி ஆற்றை ஒட்டி சாலை அமைக்க வேண்டும்.
6) விசைத்தறி தொழிலுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
7) பவானி ஜமுக்காளத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி செய்து தர வேண்டும்.
8) அந்தியூர், பர்கூர் மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்து, கல்வி, மருத்துவ வதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
9) திம்பம் மலைப்பாதையில், மீண்டும் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும்.
10) அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர வேண்டும்.
11) பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, நெருஞ்சிப்பேட்டை படகுத்துறை – நவீன சுற்றுலாத் தலமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மாவட்டம் மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி தொகுதி நிர்வாகிகள் என தலைமை மாவட்ட தலைவர் திருத.கார்த்திகேய முத்துக்குமார், ஈரோடு மாவட்ட தலைவர் ,முன்னிலைச.இரா.வேலுசாமி, ஜோசப் ராஜன் , சிறப்புரை: மாவட்டச் செயலாளர், மாவட்ட மாநிலப் பொதுச்செயலாளர் பா.குமரய்யா,மாநிலச் செயலாளர்கள் சு.தியாகராஜன் மாநில ஒருங்கிணைப்புக் குழு செயலாளர்,த.காளிராஜா இரா.ரெங்கராஜன்,மீனா ஞானசேகரன்,மகளிர் அணி வள்ளி ரமேஷ், செயலாளர், இராதிகா மோகன் , வரதராஜன் பழனிச்சாமி மாநில பொறியாளர் அணித் தலைவர், இரா.ச.கண்ணன் மாநில மீனவர் அணித் தலைவர், சா.இராஜீவ், அ.அரவிந்தன்,இரா.கதிரேசன் (கன்னியாகுமரி கிழக்கு). குரு அய்யல்ராஜ் (மதுரை), அராஜ ரகுபதி (செங்கல்பட்டு).கா.பெத்துராஜ் (காஞ்சிபுரம்), சி.இராஜேந்திரன் (திருப்பூர் புற),தி.இரவிச்சந்திரன் (மத்திய சென்னை). வி.சந்திரன் (திருச்சி),ப.முருகேசன் (பவானிசாகர்), பு.சு.செல்ஹாஜ் (பெருந்துறை). அ.பிரானேந்திரன் (அந்திபூர்).ப.பழனிவேல் (மொடக்குறிச்சி) மு.சுப்பிரமணியன் (பலானி),
தொகுதி நிர்வாகிகள்:செ.செந்தில் மருதவாணன் (மொறியாளர் அணி), சென்னியப்பன், சீனிவாசன், கலந்து கொண்டனர் .நன்றியுரை: இரா.வெங்கடாச்சலம், மாவட்டப் பொருளாளர் .






