தவறு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டும் காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது!
25/2/2025
காரைக்கால் வக்ஃபு நிர்வாக சபை ரூபாய் 10 லட்சத்துக்கும் மேல் மின் வரி பாக்கி வைத்து உள்ளது. அதற்கு அபராத தொகை மாதம் 30ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இது போன்ற இழப்பீடு அந்த நிர்வாகத்தில் பல உள்ளது. அதற்கு காரணமானவர்களின் சொந்த பணத்திலிருந்து அதற்கான தொகையை வசூல் செய்ய வேண்டும். கடந்த 24-1-25 அன்று புதுச்சேரியிலிருந்து வந்து அவசரமாக தஸ்தாவேஜிகளை அள்ளி சென்றவர்கள் ஒரு மாதத்தை நெருங்கும் நாள் கடந்தும் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது ஏன்? தப்பு செய்தவர்கள் தண்டனை பெற வேண்டியது தான் நியதி!கால தாமதம் சமுதாய மக்களிடம் வியப்பை ஆழ்த்தி உள்ளது. அவர்கள் பெறக்கூடிய தண்டனை எதிர்காலத்தில் இது போன்ற பொறுப்புக்கு வருபவர்களுக்கு பாடமாக அமையும்! இல்லையெனில் இவர்களின் செயலேயே “பாடமாக” ஏற்றுக்கொள்வார்கள்!

