காரைக்கால் முக்கிய வீதிகளில் காமராஜர் சாலை உள்ளது . இதில் நாள் ஒன்றுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் முதல், கனரக வாகனங்கள் வரை ஆயிரம் கணக்கில் பயணிக்கப்படுகிறது. பொது மருத்துவ மனை, மருத்துவ கல்லூரிக்கு செல்லும் அவசரகால ஊர்தி பெரும்பாலும் இவ்வழியில் மக்கள் செல்கின்றனர். தனியார் மருத்துவ மனைகளும் இச்சாலையில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சாலை நீண்ட காலமாகவே படுமோசமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி மனுகொடுக்கும்போது பொதுப்பணி துறை மண் கலந்த ஜல்லியை கொட்டி பள்ளங்களை மட்டும் மூடிவிடுகின்றனர் . சில நாட்களிலே மண் காற்றிலே பறந்து அல்லது மழையிலே கரைந்து ஜல்லி மேலோங்கி விபத்து ஏற்படும் நிலையை உருவாகிறது , நிரந்தர தீர்வு கிடையாது! தற்போது சிதிலமடைந்த சாலைகளுக்கு தார் கலந்த ஜல்லியை போட்டு பள்ளங்களை மூட வேண்டும்!
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொள்கிறது.
ஏ.எம்.இஸ்மாயில்,பொதுச்செயலாளர்
காமராஜர் மக்கள் கட்சி, காரைக்கால் மாவட்டம்
