இரவு நேரங்களில் சாலைகளின் மின்விளக்கு இல்லாததால் மக்கள் மாணவர்கள் அவதி
28/05/2025
காரைக்கால் பெசண்ட் நகர் இரயில்வே கிராஸிங்க்கு அடுத்து DK நகர், ஜெக்ரியா நகர், சிவாஜி நகர், மாஸ் நகர் என 600 குடியிருப்பு பகுதிகள் உள்ளது.இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


நகரப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்வதாக இருந்தால் , இரயில்வே கிராஸிங் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று விடுவார்கள்.
தற்போது அப்பகுதி அடைப்பட்டு போனதால் முன்பே வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்தே செல்கிறார்கள், அப்படி இல்லையென்றால் சில கி.மீ சுற்றி செல்லவேண்டும்! ப்
பெரும்பாலான மக்கள் நடந்தே இரயில்வே கிராஸிங்கை கடந்து வருகிறார்கள்! இரவு நேரத்தில் அங்குள்ள ஹை-மாஸ் விளக்கு நீண்ட காலமாக எரிவதில்லை.

பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும் பயனில்லை.தெருநாய், குதிரைகள் தொல்லைகளை சமாளித்து இருளில் அப்பகுதியை மக்கள் கடக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அடுத்த வாரம் பள்ளி திறந்த பிறகு சிறப்பு வகுப்பு முடித்து வீடு திரும்பும் மாணவ மாணவியர் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி அப்பகுதி ஹை- மாஸ் விளக்கு எரிய நடவடிக்கைகள் எடுக்க காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறது.
இஸ்மாயில், காரைக்கால்- காமராஜர் மக்கள் கட்சி (பொதுச் செயலாளர்)