இன்னும் ஒரு ஏட்டுச் சுரைக்காயா?

28/07/25

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் என்ற புதிய திட்டத்தை வரும் ஆகஸ்ட் 2 முதல் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் – நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம் ‘ தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைத் திட்டம் என்று பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இத்தனை சிறப்புத் திட்டங்களினால் கிடைத்த பலன்கள் என்ன என்பதை அமைச்சர் அவர்கள் ஒரு வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தினால், இந்தத் திட்டங்கள் ஏட்டுச் சுரைக்காய்கள் அல்ல என்ற தெளிவு மக்களுக்கு கிட்டும். இல்லையேல், இவை வெற்று அறிவிப்புகள் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு மோசமாக உள்ளது, கட்டிடங்கள் மட்டுமே உள்ளன, போதிய மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருத்துவப் பணியாளர்கள் இல்லை, மருந்துகள் இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து அதற்கு முதல்வர் பெயரை சூட்டும் மா சு அவர்களின் மன உறுதியை காமராஜர் மக்கள் கட்சி பாராட்டுகிறது.

பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *