மந்த நிலையில் காரைக்கால் காமராஜர் சாலை ஓர இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி
28/07/2025
காரைக்கால் காமராஜர் சாலை ஓர இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கி ஓர் ஆண்டிற்கு மேல் ஆகிறது. பணி மிகவும் மந்தநிலையில் நடந்து வந்தது! சமீபகாலமாக அவ்வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுக்காமல் அலட்சியம் செய்வதாலேயே பணியில் தொய்வு என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே பணிகள் நடந்த இடங்கள் முழுமை பெறாத காரணத்தால் ஆங்காங்கே கழுவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது! அதனால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது! டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீர் செல்ல வழியின்றி சில நேரங்களில் தெருக்களிலும் செல்கிறது! இதனால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் சிரமத்திற்கு ஆளாகுவதுடன், வியாபார ஸ்தலங்கள் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.


மிகவும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றி கொடுக்க ஆணையிடுவதுடன், பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி சார்பாக வேண்டுகிறோம்.