பொதுப்பணித்துறை – சென்னை மாநகராட்சி சார்பாக சாலை ஓரங்களில் , நடக்கும் பணிகளில் ஆபத்து விளைவிக்க கூடியதாக இருப்பதை தடுத்து நிறுத்த கோரி மனு
29/07/2025
3/129-எச் பாரதி 1வது குறுக்குத் தெரு வெட்டுவான்கேணி சென்னை – 600 115 பகுதிகளில் சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியும், மின் இணைப்புகள் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதில் மிகப்பெரிய முறைகேடுகளும், ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
கான்கிரீட் தரம் குறைவான – தரம் தாழ்ந்த நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அதற்கு குப்பைகள் பெருமளவில் தேங்கி- பணி தோய்வும் ஏற்படுகிறது.
மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ள காமராஜர் மக்கள் கட்சி தென்றலே மாவட்டச் செயலாளர் மாவட்ட தலைவர் வாசு அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு வைத்துள்ளார்.




