அரியலூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து கவனி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் ஆர்ப்பாட்டம்
23 8 2025
அரியலூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து கவனி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் நகரில் 23 8 2025 அன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செ ஹரிபாஸ்கர் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள்
செல்வநாதன், மாயவேல், ஜெயங்கொண்டம் தொகுதித் தலைவர் கருப்பையன், இளைஞர் அணித் தலைவர் கமலேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநிலச் செயலாளர்கள் இரா ரெங்கராஜன், சு தியாகராஜன், மாநிலத் துணைத் தலைவர் த காளிராஜா சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சோழகங்கம் ஏரி புனரமைப்புக்கு 660 கோடி தேவைப்படும் நிலையில் 12 கோடி மற்றும் ஒதுக்கி உள்ள தமிழக அரசைக் கண்டிப்பதுடன், உடனடியாக உரிய நிதியை ஒதுக்கி கொள்ளிடத்தில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான வழித்தடத்தை உருவாக்க வேண்டும்,



சிமெண்ட் ஆலைகள் வெளித் தள்ளும் மாசுகளில் சிக்கியுள்ள அரியலூர் மாவட்டத்தை அழிவின் விளிம்பில் இருந்து காக்கக் வேண்டும்,
சிமெண்ட் ஆலை லாரிகளால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளினால் உருவாகும் உயிரிழப்புகளைத் தடுத்திட சிமெண்ட் ஆலைகளுக்கு, சுரங்கங்களில் இருந்து சென்றுவர தனி சாலை அமைக்க வேண்டும்,
யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை முறையாகப் பராமரிக்க வேண்டும்,
ஜெயங்கொண்டத்தில் இராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்,

அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் காட்டுமன்னார்கோவில் வழியாக சிதம்பரத்துக்கு இரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும்,
ஜெயங்கொண்டத்திலிருந்து கும்பகோணத்திற்கு இரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும்,
முந்திரி தொழிற்சாலை அமைத்து முந்திரிப் பழம், கொட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்ய வேண்டும்,
ஜெயங்கொண்டம் நகரில், ஆங்காங்கே (2002 வரை இருந்தது) இலவசக் கழிப்பறைகள் அமைக்க வேண்டும்,
மாலையில், பள்ளிகள் விடும் நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாத பேருந்துகளை இயக்க வேண்டும்,
சோழகங்கம் பொன்னேரியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபாகரன், இரவிச்சந்திரன், சங்கர், மோகன்குமார், சுகுண சங்கர் சசிகுமார் உள்ளிட்ட செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் தங்க பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்.



