கழிவறைக் கதவுகளைக் கூட மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்க முடியவில்லையா?
காஞ்சிபுரம் அரசுத் தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே உள்ள ஆண்கள் கழிவறையில் கதவுகள்
பெயர்ந்து போய் உள்ளன, அதேபோல் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வார்டுகளிலும் கழிவறையின் கதவுகள் பெயர்ந்து போய் உள்ளன.
இதனால் கழிவறைகளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசு தலைமை மருத்துவமனையின்
நிர்வாகத்தால் கழிவறையின் கதவுகளைக் கூட முறையாகப்
பராமரிக்க முடியவில்லை என்றால்,
நோயாளிகளுக்கு எந்த அளவிற்கு
சீரான மருத்துவம் வழங்குகிறார்கள்? இது போன்ற சிறு பிரச்சனைகளுக்குக் கூட மனு கொடுத்ததால்தான் தீர்வு கிடைக்குமா? அரசு நிர்வாகம், தானாகவே இவற்றைக் கண்டறிந்து செயல்படாதா?
All reactions: