தமிழக அரசே! இனியாவது விழித்துக் கொள்க!

மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டுமானங்கள் நடைபெறும் அவசர கோலங்களைப் பற்றி காமராஜர் மக்கள் கட்சி தனது அறிக்கை மூலம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி எச்சரித்திருந்தது. தலைவர் தமிழருவி மணியன் அவர்களும், இந்து தமிழ் திசை இணைய தளத்திற்கு கடந்த 17ஆம் தேதி அளித்த நேர்காணலில் கவலை தெரிவித்து இருந்தார். அத்தனையும் அரசின் செவியில் ஏறவில்லை.

அதனால், ஓர் இளம் செய்தியாளர் உயிர், சென்னை ஜாபர்கான்பேட்டையில் பறி போயிருக்கிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், சென்னை மாநகர் முழுவதும் அகழி போல் தோண்டப்பட்டு இருக்கும் பள்ளங்கள், நீட்டிக் கொண்டு இருக்கும் இரும்புக் கம்பிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முத்துகிருஷ்ணன் மறைவிற்கு காரணமாக இருந்திருக்கிறது.

இன்னும் எத்தனை உயிர்களை இந்த மழை நீர் வடிகால் திட்டம் காவு கேட்கப் போகிறது என்பது தெரியவில்லை. “தமிழக அரசே! இனியாவது விழித்துக் கொள்க” என்று காமராஜர் மக்கள் கட்சி அபாய சங்கை ஊதுகிறது. செவி உள்ளோர், கேட்கக் கடவர்!

அன்புடன்,

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்

காமராஜர் மக்கள் கட்சி  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *