ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் அடிப்படை வசதிகளுக்கு காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு.கார்த்திகேய முத்துக்குமார் உதவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு கழிப்பிட வசதிகள் இல்லாத காரணத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாணவ மாணவியர் நிலை அறிந்து நமது காமராஜர் மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கார்த்திகேய முத்துக்குமார் அவர்கள் ரூ. 8000 மதிப்புள்ள சிமெண்ட் (20 ) மூட்டைகள் கட்டுமானப் பணிகளுக்கு வழங்கி பணிகளை தொடங்க உதவினார்.பள்ளி விழாவின் பொழுது காமராஜர் மக்கள் கட்சி ஈரோடு மாவட்ட தலைவர் திரு கார்த்திகேய முத்துக்குமார் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.