காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு,காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் 

காமராஜர் மக்கள் கட்சி மக்கள் சேவை பணி குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம் பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் முழு நேரமும் ரோந்து பணியில் ஈடுபடாமல் உள்ளதே ஆகும். மேலும் மாலை 5 மணிக்கு மேல் வரும் அதிரடி படையினர் மட்டுமே பேருந்து நிலையம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு முழு நேரமும் காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடாமல் இருக்கும் காரணத்தினால் திருடர்கள்,
பொதுமக்களின் கைபேசி, நகை மற்றும் பணம் போன்ற உடைமைகளை லாபகமாக திருடிச் செல்கின்றனர்.

மேலும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல 7கும் மேற்பட்ட தேவையற்ற வழித்தடங்கள் இருக்கும் காரணத்தினால் திருடர்கள் திருட்டு சம்பவங்களை நிகழ்த்திவிட்டு சுலபமாக பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறுகின்றனர்.காவல்துறையிடம் இது சம்பந்தமாக காமராஜர் மக்கள் கட்சி புகார் மனுக்கள் வழங்கியும் எந்தவிதமான நிரந்தரமான, உறுதியான நடவடிக்கைகளை காவல்துறை தரப்பிலிருந்து எடுக்கப்படாமல் இருக்கும் காரணத்தினால் திருடர்கள் சுதந்திரமாக பேருந்து நிலையத்தில் திருடி வருகின்றனர்

ஆகையால் நம்முடைய உடைமைகளை நாம் தான் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. கைபேசி நகை மற்றும் பணம் போன்ற பொருட்களை இழந்த பிற்பாடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனுவை வழங்குவது, மேலும் புகார் மனுவின் நிலை குறித்து அவ்வப்போது காவல் நிலையம் செல்வது போன்ற செயல்கள் நமக்கு கூடுதல் வேலை பலுவாக ஏற்படுகின்றது, ஆகையால் நம்முடைய பொருட்களை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

திருடர்கள் பெரும்பாலும், பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும் இடங்கள், மற்றும் பேருந்தின் படிக்கட்டுகளில் கூட்ட நெரிசலில் பயணிகள் ஒருத்தரை ஒருத்தர் முந்திக்கொண்டு பேருந்தில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் திருடர்கள் பயணிகளின்

செல்போன் நகை பணம் போன்ற உடைமைகளை மிகவும் லாபகமாக திருடி செல்கின்றனர். கூட்டமாக உள்ள இடங்கள் பேருந்து
படிக்கட்டுகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும், பேருந்துக்காக காத்திருந்து,பேருந்து வந்தவுடன் வேகமாக பேருந்தில் ஏறுவதற்காக ஓடும் பொழுதும் பேருந்தில் ஏற முயற்சி செய்யும் பொழுதும் நம்முடைய உடமைகளின் மீது அதிக அளவில் கவனத்துடன் நாம் இருக்க வேண்டும்.

மேலும் இந்த தகவல்களை உங்கள் நட்பு வட்டாரத்தில் அதிக அளவில் பகிர்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி காமராஜர் மக்கள் கட்சி மக்கள் சேவைப் பணிக்குழு கேட்டுக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *