காமராஜர் நினைவு மண்டபத்திலும், காந்தி நினைவு மண்டபத்திலும்,காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மலர் தூவி மரியாதை

சென்னை oct -2

சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவு மண்டபத்திலும், காந்தி நினைவு மண்டபத்திலும், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை ஒட்டியும் மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டியும் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநிலப் பொதுச் செயலாளர் பா குமரய்யா, மாநிலச் செயலாளர் அ கிறிஸ்டி, கலை இலக்கிய அணித் தலைவர் அ பாரி, மீனவர் அணித் தலைவர் கண்ணன் .

தென் சென்னை மாவட்டத் தலைவர் ச வாசு, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் தீ இரவிச்சந்திரன், தலைமை அலுவலகச் செயலாளர் ச கோட்டீஸ்வரன், வழக்கறிஞர் சௌந்தரராஜன், பிமல்குமார், சேகர் சக்திவேல், முனியாண்டி உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *