குடிமக்கள் குறித்த கணக்கெடுப்பிற்கு காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இப்படி செய்வதற்கு ஒரு அரசு வெக்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கு நல்லாட்சி என ஏதாவது ஒரு அடையாளம் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு பெண்ணும் குடிபோதையில் இருந்து தன் கணவர் மீண்டு வர வேண்டும் என போராடுகிறார்கள். ஆனால் அரசு நிர்வாகம் எவ்வளவு பேர் குடிக்கிறார்கள் என கணக்கிடுகிறது. மது விற்பனை குறைந்ததற்காக வேதனைப்படுகிறது இது அவமானகரமான ஒரு செயலாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்